வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
இத் தீர்த்தத் திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளதாகவும், நாளை மாலை 5 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.