நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோரின் நியமன சட்டமூலம் உள்பட நான்கு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இன்று முதல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
கூட்டத் தொடரின் முதல் அமர்வில், அரசியல் நிர்ணய சபை ஆரம்பிக்கப்பட்டு முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரையிலான நினைவுகள் குறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று நாடாளுமன்றத்தின் கூட்டம் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், வடமாநிலங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதால் நாளை புதிய கட்டடத்திற்கு நாடாளுமன்ற அலுவல்கள் இடம் மாறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.