திலீபனின் உருவப்படம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படாது எனவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தொடர் தாக்குதல்களை சர்வதேசம் கண்டிக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் விசனம் தெரிவித்துள்ளார்.