கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளும் இதனால் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் இப்பிரச்சனை தொடர்பாக உடனடியான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு, கரையோரம் பேணல், கரையோர பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவிடம் ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.