அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெற்றும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் குறித்த கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் நாளை இடம்பெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.