ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை கிரிக்கட் அணி வீரர் சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.