கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ‘ஊராட்சி மணி’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் புகார்களைத் தீர்க்கும் வகையில் உதவி மையம் அமைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்கிழமை) குறித்த மையத்தை திறந்து வைக்கவுள்ளார்.