பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர் பாடலாசிரியராக அறிமுகமாகின்றார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இது குறித்து சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பதாவது” ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்” என்றார்.
அத்துடன்”பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட பூவன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய சந்தோஷ் நாராயணன் “ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குனர் கையாண்டிருப்பதாகவும் ,அதற்கேற்றது போல யாழ்ப்பாணத்தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.