இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே இடம்பெற்றுவரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான யுவல் நோவா ஹராரி, தெரிவித்த கருத்தானது உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது ” இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கு இடம்பெற்றும் போரானாது இப்படியே நீடித்தால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
புவியியல் மற்றும் பிராந்திய நலன்களுக்காக பல்வேறு நாடுகளும் போர் மண்டலத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதோடு அது உலகப் போரை நோக்கிய படியாக இருக்கும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ரஷ்யா, உக்ரேன் போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் போர் இன்றுடன் 12ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.