பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியாகியுள்ள விஜய்யின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் ஜெயிலர், துணிவு, ஜவான் படங்கள் வசூலித்ததை விடவும் அதிகமாக வசூல்செய்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று வெளியான லியோ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தின் 2ஆம் பாதியை விட முதல் பாதி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த படம் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பால், படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். லியோ படத்தை அமெரிக்காவில் பிரதியங்கிரா சினிமாஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் முதல் நாளில் மட்டுமே லியோ 1 மில்லியன் டாலர் அளவுக்கு வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவு வசூலை ஷாருக்கானின் ஜவான், அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியின் ஜெயிலர் படங்கள் பெறவில்லை. அமெரிக்காவில் மட்டும் லியோ திரைப்படம் 1000-க்கும் அதிகான இடங்களில் திரையிடப்பட்டுள்ளது
டிக்கெட்டிற்கு தொடர்ந்து டிமாண்ட் இருப்பதால் லியோ அமெரிக்காவில் வசூலில் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரஜினியின் கபாலி திரைப்படம்தான் முதல் நாளில் அமெரிக்காவில் அதிக தொகையை வசூலித்திருந்தது. இதனை லியோ முறியடித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.