வவுனியாவில், பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார்.
பாதசாரி கடவையில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வானொன்று மோதியமையே இவ்விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.