மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது“ மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டுசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே தமது உடமைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது பொதுமக்களுடைய பொறுப்பாகும்.
அதேவேளை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவை பூட்டி பூச்சாடியின் கீழோ அல்லது கால்துடைப்பான் கீழோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.அத்துடன் சிறுபிள்ளைகளை தனிமைப்படுத்தி வீட்டில் விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்
அதேவேளை யாசகம் பெறுவதற்காகவோ அல்லது பொருட்களை விற்பனை செய்வதற்காகவோ கூறிவரும் நபர்கள் மீது கவனமாக இருக்கவும். வெளியில் வாகனம் நிறுத்த தேவை ஏற்பட்டால் சிசிடிவி கெமரா பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்தவும்.
சந்தேகத்துக்கு இடமாக நபர்கள் நடமாடினால் உடனடியாக 119 அவசரசேவை அல்லது 0718591130 பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது 065 2224422 பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைத்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள்” இவ்வாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.