கடந்த வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்ட விடயங்களே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இதனை ஆராய்ந்த பின்னர் எதிர்வரும் நாடாளுமன்ற விவாதத்தில் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பான தமது யோசனைகளை முன்வைப்போம் என கூறியுள்ளார்.
மேலும் தமது கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதி அமைச்சராக ஜனாதிபதி வந்துள்ள நிலையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது கொள்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.