தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் நவம்பர் 27ஆம் திகதி உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்று உலகம் முழுவதும் பரப்பப்பட உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
பிரபாகரனின் மகள் உயிருடன் இருப்பதாக நம்பி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்ய நோர்வேயை சேர்ந்த சர்வதேச புலிகள் வலையமைப்பு இந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மாவீரர் தினத்திற்கு முன்னரே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தலைவரின் மகளின் குரலுடன் கூடிய காணொளி ஒன்று சமூகத்திற்கு வெளியாக்கி நிதி திரட்டும் நோக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு நோர்வேயில் உள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நெடியவன் எனப்படும் பேரி;ன்பநாயகம் சிவபரன் நோர்வேயில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை மீட்டெடுக்க பல தடவைகள் முயற்சித்த போதும் புலனாய்வு அமைப்புகள் அவரின் முயற்சிகளை முறியடித்ததாக தெரிவித்துள்ளது.