இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற முதலாவது T 20 தொடரில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுக்க அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ஓட்டங்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் சதம் அடித்தார்.
போட்டி முடிவில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது
அதன்படி 209 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இதேவேளை சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் தொடர்ந்து, திலக் வர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
மேலும் அவுஸ்திரேலியா சார்பில் டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் மற்றும் ஜாசன், சியான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.