துணியை காயப்போடும் சிறிது நேரம் தண்ணீரை நன்றாக கொடி கயிற்றில் போட்டு வடிய விடுங்கள். அதன் பின்னர் முடிந்த வரை தண்ணீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாக பிழிந்து விட்டு காயப்போடுங்கள். துணி காயும் நேரம் கட்டாயம் குறையும்.
வாஷிங் மிஷினில் தூணி துவைக்கிறீர்கள் எனில் துணி துவைத்த பின் மீண்டும் டிரையர் ஆப்ஷனில் போட்டு எடுக்க தண்ணீர் கொஞ்சமும் ஒட்டியில்லாமல் பிழிந்துவிடும். பிறகு ஃபேனுக்கு அடியில் காய வைத்தாலும் ஒரே நாளில் காய்ந்துவிடும்.
வீட்டில் டேபிள் ஃபேன் இருக்கும் பட்சத்தில் துணிகள் மீது படுமாறு வைத்தால் சீக்கிரம் காய்ந்து விடும். வீட்டில் ஹீட்டர் இருந்தால் காய வைப்பது இன்னுமே எளிது.
அவசரமாக ஏதேனும் ஒரு ட்ரெஸை நீங்கள் காய வைக்க வேண்டும் என்றிருந்தால் இந்த செய்முறை உங்களுக்கு உதவலாம். ஹேர் ட்ரையரை கூல் செட்டிங்கில் வைத்து குறைந்தது 6 இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டி காய வைக்கலாம்.
சொட்ட சொட்ட நீர் வடியாமல் சிறிது ஈரமாக இருக்கும் போது இதை நீங்கள் முயற்சிக்கலாம். மிதமான சூட்டில் ஈரத்துணியை அயன் செய்தால் துணி காய்வது மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கும்