வவுனியாவில் மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு போராளிகள் நலன்புரிச்சங்கத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தோணிக்கல் வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சங்க அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து மாவீரரிகளிற்கான ஒரு நிமிட அகவணக்கத்துடன், உயிர் நீர்த்த மாவீரர்களிற்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.