விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் தாம் இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்தக வைகோ, தமிழர்களுக்காக போராடிய தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் என்னத்துடன் தாம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
பழ நெடுமாறன் ஆகியோர் விடுதலை புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் என்றும் அவர்கள் எவரும் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் தாமும் இருப்பதாகவும் அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே தமது கருத்து என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.