எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய நிர்வாக சபையும் தீர்க்கமான காரணியாக இருப்பதால் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பெரும் பொறுப்பு இந்த அதிகாரி சபைக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய கலந்துரையாடல் இது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி கூறியுள்ள போதிலும், தேர்தலை நடத்தும் நேரம் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.