இந்தியா குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
குறித்த மாநிலத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,