தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்று (புதன்கிழமை) இருந்து சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி வடக்கு, கிழக்கு, தென்,வடமத்தியமற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது