வட்டுக் கோட்டைப் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம், அலெக்ஸை பொலிஸார் சித்திரவதைக்குள்ளாக்கிய இடங்களில் விஞ்ஞான ரீதியான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் (28) சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பொலிஸாரினால் சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞன், பொலிஸார் சித்திரவதை செய்த இடங்களைக் காண்பித்தார். இவற்றினை பார்வையிட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.