அரச வைத்தியசாலைகளில் தாதியர் பராமரிப்பு சேவைகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 2019 ஆம் மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உயர் தர விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவுகளில் சித்தியடைந்து மாணவர்களில், தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பதாரர்களின் அடிப்படைத் தகுதிகள் பரிசோதிக்கும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது