20223 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அடையாள அட்டையில் மாற்றங்கள் இருந்தால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்திற்குள் பிரவேசித்து, திருத்தங்களை செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் பரீட்சை 31 ஆம் திகதி வரை 20223 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும், 2 ஆயிரத்து 298 பரீட்சை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரேவேசித்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.