முதலாவது இருபதுக்கு இருப்பது போட்டியில் இலங்கை அணிக்கு 144 ஓட்டங்களை சிம்பாவே அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருப்பது போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சிம்பாவே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதும் 5 ஆவது ஒவ்வரின் முதலாவது பந்துவீச்சில் முதலாவது விக்கெட் சாய்க்கப்பட்டது.
சிம்பாவே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டினாஷே கமுன்ஹுகம்வே 26 ஓட்டங்களோடு மகேஷ் தீக்ஷனாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதே ஓவரின் இறுதி பந்தில் கிரேக் எர்வின் 10 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 2 ஓவர்களை வீசி 5 ஓட்டங்களை கொடுத்து மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
தொடந்து நிதானமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 9 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் 14 ஆவது ஓவரில் 14 ஓட்டங்களோடு சீன் வில்லியம் ஆட்டமிழந்து வெளியேற சிம்பாவே அணி 83 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதேநேரம் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராசா 38 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டங்களோடு அரைசதம் அடித்தார். இதன்பின்னர் 62 ஓட்டங்களோடு சமீரவின் பந்துவீச்சில் சானகவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்படி 20 நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சிம்பாவே அணி 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தீக்ஷன மற்றும் ஹசார்ங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் சமீரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இதுவரை மூன்று ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் மூன்று போட்டிகளிலுமே இலங்கை அணிதான் வெற்றிபெற்றுள்ளன.