மலையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது.
அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் – டன்பார்க் மைதானத்தில் குறித்த விழா நடைபெற்றது.
இதில் 1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் இந்தப் பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டப்பட்டிருந்தது.
அத்துடன் கோலப்போட்டி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் உள்ளிட்ட பல பாரம்பரிய போட்டிகளும் இடம்பெற்றன.
மேலும் இந்த தேசிய பொங்கல் விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.