இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.
இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணி உடல் நலக் குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் நாளை மறுதினம் இடம்பெற இருந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள இசைஞானி இளையராஜா தலைமையிலான குழுவினர் கொழும்பு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.