76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு 30, 31, 01, 02 மற்றும் 03 ஆகிய நாட்களில் அமுலில் இருக்கும் போக்குவரத்து திட்டம் குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல், வீதிகள் மூடல் மற்றும் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துதல் குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், பெப்ரவரி 3ம் திகதி பிற்பகல் 02:00 மணி முதல் சுதந்திரக் கொண்டாட்டம் முடியும் வரையிலும் போக்குவரத்துத் இத்திட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது.