தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில், ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக nதிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில், குறிப்பிட்ட மாவட்ட வருவாய் துறையின் ஒரு நிர்வாக பிரிவிலும், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடக்கும் நிர்வாக பிரிவு குறித்த தகவல், முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்பதுடன், முகாம் நடக்கும் அன்று காலை 9:00 மணி முதல், மறுநாள் காலை 9:00 மணி வரை, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏனைய உயர் அலுவலர்கள், அந்த நிர்வாக பிரிவுகளில் தங்கி, பல்வேறு அரசு துறைகளின் வழியே செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.