குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 3 பெண்பிள்ளைகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனில் தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது உறவினரது வீட்டில் இடம்பெற்ற துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுதா அங்கு சென்றிருந்த நிலையில் இதனை அறிந்த சுனில், அங்கு சென்று சுதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது ஆத்திரமடைந்த கணவர் சுனில், மனைவி சுதாவின் மூக்கை கத்தியால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதேவேளை படுகாயமடைந்த சுதா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச்சென்ற அனில் குமாரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.