இரும்புத் தளபதியென அழைக்கப்பட்ட உக்ரேனின் ஆயுதப்படை தலைமை தளபதியான வலேரி ஜலுன்ஸ்யியை அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செலன்ஸ்கிக்கும் தளபதி வலேரி ஜலுன்ஸ்யிக்கும் இடையே ஏற்பட்டுவந்த மோதல் காரணமாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுடனான போரின் போது சிறப்பாக செயற்பட்டமைக்காக வலேரி ஜலுன்ஸ்யி இரும்புத் தளபதியென அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.