ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸங்க, சதம் விளாசியுள்ளார்.
ஆரம்ப விக்கெட்டுக்காக துடுப்பெடுத்தாடிவரும் பெத்தும் நிஸங்க, 88 பந்துகளில் சதம் கடந்து துடுப்பெடுதாடிவருகிறார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 4 வது சதமாகும்.
இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது 31.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மறுமுனையில் 6 ஓட்டங்களுடன் குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடி வருகிறார்.