கச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என தமிழக தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தமிழக மீனவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















