திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற வேன், எதிர் திசையில் வந்த மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இன்னிலையில் காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், காயமடைந்த டிப்பர் சாரதி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
மேலும் உயிரிழந்த பெண் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.