வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்களின் கூட்டு ஒழுங்கு படுத்தலில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 8 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது யுத்தம் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரியும், பால்நிலை சமதுவம், உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு பேரணியொன்று A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இப்பேரணியானது கிளிநொச்சி, பசுமை பூங்கா வரை சென்றதையடுத்து, அங்கு மகளீர் தின நிகழ்வுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் பெண்களின் உரிமை, பால்நிலை சமத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்தரங்குகளும் நடைபெற்றன.