தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
UNICEF, உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி குழு ஆகியவற்றின் சமீபத்திய இறப்பு மதிப்பீடுகளின்படி இந்த விடையம் தெரியவந்துள்ளது.
அதன்படி 1990 மற்றும் 2022 க்கு இடையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 5 மில்லியனில் இருந்து 1.3 மில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
எனினும் தெற்காசியாவில் 5 வயதுக்குட்பட்ட 29 குழந்தைகளில் ஒருவர் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நான்கில் ஒரு மரணம் குறைப் பிரசவத்தால் ஏற்படுவதாகவும், பிறக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் நிமோனியா போன்ற பல்வேறு நோய்கள் இதற்குக் காரணம் என்றும் அறிக்கை காட்டுகிறது.
மேலும் உலகளவில் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நேரம் அவர்களின் வாழ்க்கையின் முதல் மாதமாகும், என்றும் தெற்காசியாவில் 2022 இல் பிறந்த குழந்தை இறப்புகளில் 34% ஆகும்.
அத்துடன் 1990 ஆம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட இறப்புகளில், புதிதாகப் பிறந்த இறப்புகள் 46 சதவீதமாக இருந்தத நிலையில் 2022 இல், இது 63 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறித்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.