இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது
இந்தப் போட்டி இன்று இலங்கை நேரப்படி காலை 09.30 மணிக்கு சட்டோகிராமில் உள்ள அஹமட் சௌத்ரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் இரு அணிகளும் இதுவரை தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டி இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது
மேலும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.