மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தாங்கள் விரும்பியபடி வெற்றியடையவில்லை என்ற ஆதங்கத்தால் பலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேல் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். ஆனால் உண்மையில் அவை 100 சதவீதம் பாதுகாப்பானவை. அதிலிருக்கும் தரவுகளை யாரும் மாற்ற இயலாது எனவும் அவர் தெரிவித்தார்
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர்களின் ரகசியத்தை பேணுவதற்கு அவற்றை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் தேவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தொழில்நுட்பம் தற்போது தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.