நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது
இதன்படி நாடாளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை 22 சதவீதமும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை 19 சதவீதம் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
குறித்த ஆய்வில், 25 மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஆயிரத்து 350 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பானது கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19சதவீதம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2011 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் மீதான நம்பிக்கை 56சதவீதமாக காணப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக குறைவடைந்துள்ளது
இதேவேளை ராணுவம் மற்றும் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மை பேணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது
இதனிடையே பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்ற போதிலும் பத்தில் ஒரு வீதமானவர்கள் சர்வாதிகார ஆட்சியை விரும்புவதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது