அ.தி.மு.க கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.கவின் பெயர், கொடி, சின்னம், கடிதத்தலைப்பு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், ‘அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் எனவும் மனுதாரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.