புத்தாண்டு காலத்தில் பல்வேறு பொருட்கள் விற்பனை நிலையங்களினால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் “விற்பனை” (sale) என்ற பெயரில் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் போது இந்த நிலைமை ஏற்படலாம் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் காலாவதியாகவுள்ள பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு பண்டிகைக் காலங்களில் விற்பனை இடம்பெறலாம் எனவே இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் .அசேல பண்டார குறிப்பிட்டுள்ளார்.