பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இருந்து விலகுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் சேவையை விட்டு வெளியேறும் நிலமை அதிகரித்துள்ளதால், பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
பொருளாதாரச் சிக்கல்களுக்கு மேலதிகமாக பொலிஸாரின் மனிதவள முகாமைத்துவம் சரியாகச் செயற்படாததுடன் சேவையைக் கைவிடுவதும் வேரூன்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பணியில் இருந்து விலகியவர்களில் பெரும்பாலானோர் புதிதாக பணியில் சேர்ந்துள்ள பயிற்சி அதிகாரிகள் என தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.