ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
அதற்கமைய, இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 12ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அண்மையில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் 277 ஓட்டங்களை பதிவுசெய்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை பதிவுசெய்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது.
தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 13ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதலாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரையும் , இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்சையும் வாழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.