இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் போரானது 6 மாதங்களைக் கடந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த போரினால் இஸ்ரேல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலின் இந்நிலைக்கு பிரதமரே காரணமெனவும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி பொது மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டங்களின் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டு வருவதாகவும், இதனால் நாட்டில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.