இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் பதற்ற நிலையை அதிகரிக்ககூடாது எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவுள்ளது என வெளியாகும் அறிகுறிகள் குறித்து அவுஸ்திரேலியா கடும் கரிசனை கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.