இஸ்ரேலிக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு, ஈரானிய மக்கள் வீதிக்கிறங்கி ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
இஸ்றேல் மீது ஈரான் முன்னொருபோதும் இல்லாதளவில் பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதலை நடத்தியுள்ளது.
இத் தாக்குதலுக்கு, மிகழ்சியை வெளிப்படுத்தியுள்ள ஈரானிய மக்கள், “ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது“, “அடுத்த அடி மிகமோசமானதாக காணப்படும்“, “இஸ்ரேலிற்கு மரணம் அமெரிக்காவிற்கு மரணம்“ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
தெஹ்ரானின் பலஸ்தீன சதுக்கத்தில், பலஸ்தீன கொடிகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், இவ்வாறு இஸ்ரேலுக்கு எதிராகவும் ஈரானுக்கு ஆதராவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்ததுடன், இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது பெருமளவான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் நூற்றுக்கும் அதிகமான ட்ரோன்கள் இஸ்ரேலை வந்து தாக்கின.
இத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள இராணுவதளமொன்று சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் செலுத்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேலின் எல்லைக்குள் வைத்து செயல் இழக்கச்செய்துவிட்டதாக இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் இஸ்ரேலை நோக்கி செலுத்திய அனைத்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை செயல் இழக்கச்செய்வதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு உதவியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலால், மறு உத்தரவு வரும்வரை, இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.