ஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கான நம்பிக்கை இல்லாதுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆட்சி அதிகாரம் உள்ளவர்களே முதலில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.
ஆனால் இப்போது இந்த நிலைமை மாறி ஆட்சியாளர்கள் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் தாமதப் போக்கில் உள்ளனர்.
பொதுஜன பெரமுனவினர் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் அவர்களால் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்க முடியாத நிலையிலேயே உள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவி வகிப்பவர்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
லொஹான் பிரசன்ன ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக ராஜபக்ஷ தரப்பினரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலை விரைவில் ஏற்படும். அதேபோல் சஜித் அணியினரும் இதுவரை வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே உள்ளனர்.
தாமே ஜனாதிபதி வேட்பாளர் என சஜித் பிரேமதாச கூறுகின்றார். ஆனால் அவரது அணியில் உள்ள கிரியெல்ல, எரான், கபீர் போன்றவர்கள் அவ்வாறான எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
ஏனெனில் அவர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதற்கான நம்பிக்கை இல்லாதுள்ளனர்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.