செலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளைப் படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய இரு உக்ரேனிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் அரசின் பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகிக்கும் கேர்னல்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ரஷ்ய பாதுகாப்பு பிரிவிடம் இருந்து 2 ஆளில்லா விமானங்களையும் மற்றும் வெடிபொருட்களையும் பெற்றுள்ளார் எனவும் அவற்றை மற்றொரு நபருக்குக் கொடுத்து, குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த திட்டம் தீட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவர் மீதும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.