சினிமாவில் ஒருவரையொருவர் குறைக்கூறி கொள்வது வழக்கம் என்றாலும் , தற்போது சமூகவலைதளங்களின் பாவணையால் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் , இளையராஜா மற்றும் வைரமுத்துக்கு இடையிலான சர்ச்சை பெருமளவில் மேடைகளில் பேசப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் , வைரமுத்து வெளியிட்டிருந்த பதிவுக்கு கடுமையாக சாடி கங்கை அமரன் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் வைரமுத்து ஒரு மேடையில் மொழியா அல்லது இசையா பெரிது என கேட்க்கப்பட்ட கேள்விக்கு இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி என அவர் கூறிய கருத்து நேரடியாக இளையராஜாவை தாக்கியதாக கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் இளையராஜா ஒரு காணொளியை தனத உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அதில் “ என்னை பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் . அவற்றை பற்றி எனக்கு கவலை கிடையாது . நான் என்னுடைய வேலையை எனது வழியில் செய்து கொண்டு செல்கின்றேன். மற்றவர்கள் என்னை பற்றி தவறாகவும் , புகழ்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிம்போணியை எழுதி முடித்து விட்டேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.