கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை தொடர்பான குரல் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது
சந்தேக நபரின் குரல் பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும், சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்துள்ளதால் அது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளையாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குரல் பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும், அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாததன் மூலம் தனது கட்சிக்காரருக்கு அநீதி இழைக்கப்படுவதாக நீதிமன்றில் தெரியப்படுத்தினார்.
இதேவேளை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற எல்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சசித்ர சேனாநாயக்க, தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,